Maalai En Vethanai Song Lyrics in Tamil
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி..
என்னை வாட்டும் வேலை ஏனடி?
நீ சொல்வாய் கண்மணி..
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ..
வேதனை சொல்லிடும் ராகத்திலே..
வேகுதே என் மனம் மோகத்திலே..
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி..
காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா அம்பி?
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்சு என்னா அம்பி?
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்..
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்..
பூங்கிளி கைவரும் நாள் வருமா..?
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா..?
மாலை என் வேதனை கூட்டுதடி..
காதல் தன் வேலையை காட்டுதடி..
காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?
வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?
கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்..
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்..
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே..
என் மனம் அவள் மடி சாய்கிறதே..
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி..
என்னை வாட்டும் வேலை ஏனடி?
நீ சொல்வாய் கண்மணி..
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ..
வேதனை சொல்லிடும் ராகத்திலே..
வேகுதே என் மனம் மோகத்திலே..
மாலை என் வேதனை கூட்டுதடி..
காதல் தன் வேலையை காட்டுதடி...
Movie: Sethu
Lyrics: Arivumathi
Music: Ilaiyaraaja
Lyrics: Arivumathi
Music: Ilaiyaraaja
0 Comments