மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை திரிஷா கண்டனம்

லியோ படத்தில் நடிகை திரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சென்னை,

லியோ படத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதனிடையே, நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரது பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் தொடர்ந்து ஆசைப்படலாம், ஆனால் அவரைப் போன்ற மோசமான ஒருவருடன் நான் நடிக்கவில்லை என்பதில் நான் நன்றாக உணர்கிறேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.