மரங்கள் இல்லை எனில் இந்த பூமி இல்லை... 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட நடிகை பூமி பட்னாகர்

உலக சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடிகை பூமி பட்னாகர் நட்டுள்ளார்.

புனே,

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த முறை 50-வது ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் வருகிறது.

சர்வதேச சமூகத்தினரால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வையும் மற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்த நாள் ஊக்கம் ஏற்படுத்துகிறது.

இந்த தினத்தில் பாலிவுட் நடிகை பூமி பட்னாகர் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மரக்கன்றுகளை நட்டு அவர் கூறும்போது, மரங்கள் இல்லை எனில் இந்த பூமி இல்லை.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் என்னால் முடிந்த வரை இந்த பூமியை தூய்மையாக்குகிறேன். பசுமையான பூமியாகவும் மாற்றுகிறேன். தொடர்ந்து இதனை செய்வேன். மற்றவர்களும் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவோம் என்பது உலக சுற்றுச்சூழல் தினத்தில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக உள்ளது.