ஆர்யா நடித்துள்ள 'தி வில்லேஜ்' வெப் தொடரின்  டிரைலர் வெளியீடு

இந்த வெப்தொடர் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சென்னை,

நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தி வில்லேஜ்’. ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப்தொடரில் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த வெப்தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த வெப்தொடர் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ‘தி வில்லேஜ்’ வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.