வீட்டை ரூ.32 கோடிக்கு விற்ற தனுஷ் பட நடிகை

தனுஷ் பட நடிகை சோனம் கபூர் மும்பையில் உள்ள தனது 5 ஆயிரத்து 533 சதுர அடி கொண்ட ஆடம்பர வீட்டை ரூ.32 கோடிக்கு விலை பேசி விற்று இருக்கிறார்.

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் ராஞ்சனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இந்த படத்தை தமிழிலும் வெளியிட்டனர். இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூருக்கும், தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வாயு என்ற ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்கு பிறகும் சோனம் கபூர் சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சோனம் கபூர் மும்பையில் உள்ள தனது 5 ஆயிரத்து 533 சதுர அடி கொண்ட ஆடம்பர வீட்டை விற்று இருக்கிறார்.

இந்த வீடு அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 3-வது மாடியில் அமைந்து இருக்கிறது. இதை 2015-ல் சோனம் கபூர் வாங்கினார். தற்போது இந்த வீட்டை ரூ.32 கோடிக்கு விலை பேசி விற்று இருக்கிறார்.

வீட்டை வாங்கிய புதிய உரிமையாளருக்கு 4 கார் பார்க்கிங் வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.