விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான்

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. அதற்கு முந்தைய படங்கள் தோல்வி அடைந்த நிலையில் பதான் வெற்றியால் அவர் குஷியானார்.

தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் சென்னை வந்த ஷாருக்கான் ஜவான் பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, “விஜய் மாதிரி என்னால் நடனம் ஆட முடியாது. எனவே படத்தில் கடினமான டான்ஸ் அசைவுகளை எனக்கு கொடுக்க வேண்டாம் என்று நடன இயக்குனரிடம் தெரிவித்தேன். விஜய்சேதுபதியை மிகவும் நேசிக்கிறேன். ஒய் திஸ் கொலைவெறி பாடலில் இருந்தே அனிருத்தை எனக்கு பிடிக்கும். ஜவான் படத்துக்கு அவரே இசையமைக்கட்டும் என்று கூறி விட்டேன்”.

தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோரை மட்டுமே தெரியும். இப்போது ஏராளமான தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் நட்பு கிடைத்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்றார்.