விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படம்

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அன்பு டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

காட்டில் வாழும் இளைஞனுக்கும், அங்குள்ள யானைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை மையமாக வைத்து அதிரடிப் படமாக தயாராகிறது. கேரளா காடுகளில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தாய்லாந்து, ஒடிசா காடுகளிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். காட்டு யானைகளின் வாழ்வியல் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை படத்தில் பதிவு செய்யப்படுகிறது. ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.சதீஷ்குமார்.