'லியோ' படத்தின் போஸ்டர் அப்டேட்டை ஒத்திவைத்தது படக்குழு

‘லியோ’ படத்தின் போஸ்டர் அப்டேட்டை படக்குழு ஒத்திவைத்து உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மீராவின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ‘லியோ’ படத்தின் போஸ்டர் அப்டேட் இன்று வெளியாக இருந்த நிலையில், போஸ்டர் அப்டேட்டை படக்குழு ஒத்திவைத்து உள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து போஸ்டர் அப்டேட்டை நாளைக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளது.