ரசிகர்களுக்கு லாரன்ஸ் அறிவுரை

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன். அந்த பணத்தை அப்பா, அம்மாவுக்கு செலவு செய்யுங்கள் பட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு லாரன்ஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்’ படம் உருவாகி உள்ளது.

பட நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசும்போது, “எனது ரசிகர்கள் அனைவரும், எங்களை படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஏன் அழைப்பதில்லை என்று என்னிடம் வருத்தப்படுகின்றனர். நான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன்.

உங்களுடைய நேரத்தை நான் எடுத்துகொள்ள மாட்டேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எந்த ஆடியோ நிகழ்ச்சிக்கும் வர வேண்டாம். அந்த பணத்தை அப்பா, அம்மாவுக்கு செலவு செய்யுங்கள். நேரத்தை வேலைக்கு செலவு செய்யுங்கள். நீங்கள் பணம் கொடுத்து படம் பார்ப்பதே எங்களுக்கு செய்யும் பெரிய உதவி. நான் எப்போதும் உங்களை அழைக்க மாட்டேன்.

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. அந்த படத்தை தியேட்டரில் பார்த்ததும் நல்ல படத்தை தவற விட்ட வருத்தம் இருந்தது. இப்போது ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அதன் இரண்டாம் பாகம் படம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி” என்றார்.