ரசிகர்களுக்கு நல்ல தகவலை கூறிய ரம்பா...!

அவர் மீண்டும் ஒரு படத்திலாவது நடிப்பாரா என ரசிகர்கள் ஏங்கி தவித்தனர்.

சென்னை,

தமிழ் சினிமாவில் ‘உழவன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், சிவசக்தி,தர்ம சக்கரம், ராசி, அடிமை சங்கிலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 90 காலகட்டத்தில் நடிகை ரம்பாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று கூறலாம்.

ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அஜித், விஜய், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த ரம்பா, திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகினார் என்றே கூறலாம்.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகை ரம்பா இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்னதாக அவர் கடைசியாக நடித்த திரைப்படம் பெண் சிங்கம்தான். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவே இல்லை. அவர் மீண்டும் ஒரு படத்திலாவது நடிப்பாரா என ரசிகர்கள் ஏங்கி தவித்தனர்.

அந்த வகையில் நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சினிமாவில் மீண்டும் வருவது குறித்து பேசிய நடிகை ரம்பா “சினிமாவில் நான் பல ஆண்டுகள் நடிக்காமல் இருக்கலாம் ஆனால், சினிமாவை கவனிக்காமல் எல்லாம் இல்லை.

தொடர்ந்து நான் சினிமாவை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. எனவே, எனது வயதுக்கேற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். எனவே என்னுடைய ரசிகர்கள் என்னை விரைவில் மீண்டும் திரையில் பார்க்கலாம்” என கூறியுள்ளார். மீண்டும் ரம்பா சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.