முனீஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள 'காடப்புறா கலைக்குழு' படத்தின் டிரைலர் வெளியானது

முனீஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘காடப்புறா கலைக்குழு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

சக்தி சினி புரொடக்சன்ஸ் சார்பில் முருகானந்தம் வீரராகவன் தயாரித்துள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. ராஜ குருசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், மைம் கோபி, ஹரி கிருஷ்ணன், ஸ்ரீலேகா ராஜேந்திரன், சுவாதி முத்து, சூப்பர் குட் சுப்ரமணி, அந்தக்குடி இளையராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹென்றி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.