'மாமன்னன்' படத்தின் 2வது பாடல் 'ஜிகு ஜிகு ரெயில்' வெளியானது...!

ஏ.ஆர்.ரகுமானின் துள்ளலான குரலில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஜிகு ஜிகு ரெயில்’ வெளியானது.

சென்னை,

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

கடந்த வாரம் வடிவேலுவின் மெல்லிய குரலில் முதல் பாடல் ‘ராசா கண்ணு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஏ.ஆர்.ரகுமானின் துள்ளலான குரலில் வெளியாகி உள்ள ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.