பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஆதிபுருஷ்' படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு.!

திரையரங்கிற்குள் நுழைந்த இந்து அமைப்பினர் படத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி திரையிடலை நிறுத்தினர்.

சென்னை,

பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயணம் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை, மராட்டிய மாநிலம் நலசோபர பகுதியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸில் திரையிட்டபோது, திரையரங்கிற்குள் நுழைந்த இந்து அமைப்பினர் படத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி திரையிடலை நிறுத்தினர்.

இந்துக்களை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறி, திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.