'பிக் பாஸ்' வீட்டில் வெளியான ஜெயம் ரவி படத்தின் டீசர்..!

‘சைரன்’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘சைரன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ‘சைரன்’ படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘சைரன்’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.