பாடல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் - ஆட்டோ ஓட்டுநரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய வைரமுத்து

ஆட்டோ ஓட்டுநர் லூர்துராஜை கவிஞர் வைரமுத்து தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை,

லூர்துராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர், ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் லூர்துராஜை கவிஞர் வைரமுத்து தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, லூர்துராஜ் குறித்து அறிந்து வியந்து போனதாகவும், ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் அவர் ஓர் அதிசயம் என்றும் பதிவிட்டுள்ளார்.