நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல - மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.

சென்னை,

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது. இந்தநிலையில், நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.

இதற்கிடையில் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, நீதிமன்றம் விளையாட்டு மைதானமல்ல, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கண்டித்தார். நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை நாளை (நவ.23) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.