நீச்சல் உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்....! 'இதற்காகதானா'  நெட்டிசன்ஸ் கேள்வி !

நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் பகிர்ந்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

சென்னை

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தடம் பதித்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்விகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ், சினிமா குடும்பத்தை பின்புலமாக கொண்டவர்.

மலையாள தயாரிப்பாளரான சுரேஷ் குமார் மற்றும் தமிழ் நடிகை மேனகாவின் மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ், ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களை காட்டிலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

கடைசியாக தமிழில் செல்வராகவனுடன் இணைந்து சாணி காயிதம் படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது மாமன்னன், சைரேன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.இதில் சிரஞ்சீவியின் சகோதரியாக நடிக்கிறார்.

இவர் தெலுங்கில் தசரா என்ற மற்றொரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் கீர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகை கீர்த்தி தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் ஓய்வை கழித்து வரும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். முதல் முறையாக நீச்சல் உடை அணிந்துள்ள கீர்த்தி சுரேஷ், நீச்சல் குளத்தில் குளித்தப்படியே பிரேக் பாஸ்ட் சாப்பிடும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதேபோல் மேக்ஸி உடை மற்றும் குட்டி டிரவுஸர் என அணிந்து தாய்லாந்து கடற்கரையின் அழகை ரசிக்கும் போட்டோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் கோ சமுய் தீவிற்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சன் செட்டை ரசித்த காட்சிகளையும் போட்டோவாக வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த நீச்சல் குள போட்டோக்களும் பீச் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ள இந்த ஹாட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், வேற லெவல், ஹாட்னஸ் ஓவர் லோடட் என வாயை பிளந்துள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் நீங்கள் பழைய கீர்த்தி சுரேஷாகவே இருங்கள், இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் சினிமா வாய்ப்பு குறைந்ததால் பிகினி அஸ்திரத்தை கையில் எடுத்து விட்டீர்களா என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.