நானி நடிக்கும் 'ஹாய் நான்னா' படத்தின் 'மையல்' பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

‘ஹாய் நான்னா’ படத்தின் மூன்றாவது பாடலின் லிரிக் வீடியோ வருகிற 4-ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘மையல்’ பாடலின் லிரிக் வீடியோ வருகிற 4-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.