நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த மேலாளர்...!

ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த அவரது மேலாளர் அவரிடம் ரூ.80 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

மும்பை

தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பல மொழிகளில் வெளியான புஷ்பா அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

ரஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவரிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த அவரது மேலாளர் அவரிடம் ரூ.80 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் இந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக ‘அனிமல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.