நடிகர் விஜய்யின் லியோ படம் எப்படி இருக்கிறது? - ரசிகர்கள் கருத்து

நடிகர் விஜய்யின் லியோ படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அதிகாலை முதலே தியேட்டர் முன் பெருமளவில் திரண்டு படத்தை பார்த்து சென்றனர். காலை ஏழு மணி காட்சிக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர்.

சிறப்புக் காட்சி முடிந்து வெளியில் வந்த ரசிகர்களிடம், படம் எப்படி இருக்கிறது? என்று தந்தி டி.வி. சார்பில் கேட்கப்பட்டது. அப்போது ரசிகர்கள் படம் அருமையாக உள்ளது. லியோ திரைப்படம் தரமான சம்பவமாக உள்ளது. எந்த ஒரு சீனையும் தவறாமல் பாருங்கள்; ஒவ்வொரு சீனிலும் ஆச்சரியம் மிகுந்த காட்சிகள் உள்ளது.வசூல் வேட்டையில் லியோ படம் ஆயிரம் கோடியை தாண்டும் என பாராட்டினர். அதேபோன்று ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலும் லியோ படம் இன்று காலை 4 மணிக்கு வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.