தனுஷ் 50-வது படத்தின் இசையமைப்பாளர் யார் ? வெளியான தகவல்

தனுஷ் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்திருந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு தனுஷ்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மரியான், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.