தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் டிரைலர் வெளியானது..!

தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.