'டான்ஸிங் ரோஸ்' ஷபீர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கதாநாயகனாக நடிக்கும் ‘பர்த் மார்க்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் ‘பர்த் மார்க்’. இந்த திரைப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார். மேலும், தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

மிஸ்ட்ரி-டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதை 90-களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பர்த் மார்க்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.