'ஜெயிலர்'  திரைப்படம் கண்டிப்பாக பார்ப்பேன்... ஷாருக்கான்

ரசிகர் ஒருவர் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்ப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான், ரஜினி சார் மாஸ் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதாவது, நடிகர் ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்ப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, கண்டிப்பாக பார்ப்பேன்.. ஐ லவ் ரஜினி சார்.. அவர் மாஸ்! அவர் ‘ஜவான்’ படப்பிடிப்பு தளத்திற்கு வந்து எங்களை ஆசிர்வதித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.