ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..!

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி தற்போது இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 32-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜீனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.