அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரிபெல்’.
சென்னை,
அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரிபெல்’ (Rebel). இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘ரிபெல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘ரிபெல்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.