சூர்யாவின் 5 படங்கள்...!

ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூர்யா தனது புதிய படங்கள் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வாடிவாசல் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இன்னும் பட வேலைகள் தொடங்காமல் தாமதமாகி வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த கதாபாத்திரத்தை வைத்து புதிய படத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இரும்பு கை மாயாவி படமும் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூர்யா தனது புதிய படங்கள் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, “கங்குவா படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்து இருக்கிறது. நான் நடிக்க உள்ள 43-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும். வெற்றி மாறன் தற்போது விடுதலை 2-ம் பாகம் படத்தை எடுத்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும்.

விக்ரம் படத்தில் நான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் உருவாக உள்ளது. அந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை எனக்கு பிடித்துள்ளது. ரோலக்ஸ் படத்தை எடுத்து முடித்த பிறகு இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார்.