கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு தகவல் ...!   விவாகரத்து குறித்த செய்திக்கு நடிகை அசின் கோபம்...!

திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார்.

மும்பை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். தமிழில் உள்ளம் கேட்குமே, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வரலாறு, போக்கிரி,வேல், சிவகாசி, கஜினி, மஜா, காவலன் உள்பட பல படங்களில் நடித்தவர் அசின். கமலின் தசாவதாரம் என தமிழில் நடிகை அசின் நடித்த படங்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டன. கேரளாவை சேர்ந்த இவர் மலையாள பட உலகிலும் பிரபல நடிகையாக இருந்தார்.

கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது அமீர்கான் ஜோடியாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் அவருக்கு இந்தி படங்கள் குவிந்தன. சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

இதன்பின் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் பாலிவுட் பக்கம் ஒதுங்கிய அவர் அங்கு சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பான் இந்தியா நடிகை ஆனார்.

ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது. புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ராகுல் சர்மா 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோமேக்ஸின் தலைமை நிர்வாகி ஆவார்.செப்டம்பர் 14, 1975 இல் பிறந்த 47 வயதான அவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். 2017 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 1300 கோடி ரூபாய் என அறிவித்து இருந்தது.

திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார்.இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என பெயரிட்டுள்ளனர்.

அசின் – ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை

அசின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். இதை வைத்தே அவர் கனவருடன் விவாகரத்து என பேசப்படுகிறது.

இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இது முற்றிலும் வதந்தி என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க என நடிகை அசின் விவாகரத்து வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.