புத்தாண்டு பிளான்

புத்தாண்டு பிளான்

எப்பவுமே நாம தான் முதலில் இருக்க வேண்டும் என நினைக்கும் மாஸ் நடிகர் பிரம்மாண்டமாக படத்திற்கான ப்ரமோஷன் விழாவெல்லாம் நடத்தி முடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதே போல புத்தாண்டுக்கும் தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த அப்டேட்டை வெளியிட வேண்டும் என இயக்குநரிடம் சொல்லி இருந்தாராம்.

எல்லாம் முடிஞ்சிடும் பாஸ்

எல்லாம் முடிஞ்சிடும் பாஸ்

சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கூட மாஸ் நடிகர் கேட்டதற்கு பசங்க எல்லாம் தீயாய் வேலை செஞ்சிட்டு இருக்காங்க.. எல்லாமே பக்காவா முடிஞ்சிடும் பாஸ் என இயக்குநர் உறுதி அளித்திருக்கிறாராம். ஆனால், கடைசி நேரத்தில் இன்னமும் சில தினங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதை அறிந்து பதறிப்போன இயக்குநர் நடிகரிடம் இதைப்பற்றி எப்படி சொல்லப் போகிறோம் என பதறி போய் விட்டாராம்.

கடுப்பான ஹீரோ

கடுப்பான ஹீரோ

எல்லாம் சரியா போயிட்டு இருக்கு கரெக்ட்டான நேரத்தில் வெளியாகும்னு சொன்னீங்க.. எங்கே என கேட்டு இயக்குநரிடம் செம கடுப்பை மாஸ் நடிகர் காட்டி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்னமும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியாதது மாஸ் நடிகரை மனதளவில் ரொம்பவே பாதிப்படைய செய்துள்ளதாம்.

லேட்டாகும்

லேட்டாகும்

இன்னைக்கு நாளைக்கு என ரசிகர்கள் ஒரு பக்கம் ஃபயர் விட்டுக் கொண்டிருக்க இப்போதைக்கு அந்த அப்டேட் வருவது கொஞ்சம் கால தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைந்து வேலைகளை முடித்து விட்டு சர்டிபிகேட் வாங்க நடிகர் தரப்பிலும் பெரிய அளவில் பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

படமே ரிலீஸாகிடும் போல

படமே ரிலீஸாகிடும் போல

எல்லா பணிகளும் அவசர அவசரமாக நடத்தப்பட்டால் சொதப்பல்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கு என்கிற அச்சமும் எழுந்துள்ளது. பொறுமையாக பார்த்து செய்தால் அதற்குள் படத்தை ரிலீஸ் பண்ண வேண்டிய தேதியே வந்துடும் போல அதற்குள் இயக்குநர் ப்ரொடக்‌ஷன் பணிகளை முடித்து விட்டு படத்தை வெளியிட்டு விடுவாரா என்கிற சந்தேகமும் படக்குழுவுக்கு எழுந்துள்ளது என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.