உயரமும் கவர்ச்சியும் கொடுத்த பலன்

உயரமும் கவர்ச்சியும் கொடுத்த பலன்

தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்தவர் அந்த உச்ச நட்சத்திரம். சமீபத்தில் கூட பாக்ஸ் ஆபிஸில் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்றியது இவரின் திரைப்படம் தான். இவரது மூத்த வாரிசு பத்தாண்டுகளுக்கு முன்னரே திரையுலகில் நடிகையாகவும் பாடகியாகவும் அறிமுகமானார். ஒல்லியான உடல்வாகும் கொஞ்சம் தாராள மனதும் நடிகையை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாக்கியது. நடிப்பில் சுமார் என்றாலும் இவர் மீது ரசிகர்களுக்கு கிரஷ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருந்தது.

 இளம் ஹீரோக்கள் டூ சீனியர்ஸ்

இளம் ஹீரோக்கள் டூ சீனியர்ஸ்

அறிமுகமான புதிதில் சூரிய வெளிச்சம் நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து பத்துக்குள்ள வரும் ஒரு சின்ன நம்பரின் படத்தில், ஒல்லி நடிகருடன் செம்மையாக ரொமான்ஸ் செய்தார். இந்தப் படத்தை அந்த ஒல்லி நடிகரின் மனைவி தான் இயக்கினார். படத்தில் மட்டும் இல்லாமல், ரியலாகவும் இந்த ஜோடி ரொமான்ஸ் செய்ததாக அப்போது பிரச்சினையும் வெடித்தது. அதன்பிறகு அவர் உயரத்துக்கு தமிழில் இருக்கும் வசமான நடிகருடன் தெய்வீகமான டைட்டில் கொண்ட படத்தில் நடித்தார்.

 சீக்கிரமே மார்க்கெட் காலி

சீக்கிரமே மார்க்கெட் காலி

இன்னொரு பக்கம் டோலிவுட், பாலிவுட் பக்கமும் ஓடிஓடி வாய்ப்புத் தேடிய வாரிசு நடிகைக்கு, முதலில் கை மேல் பலன் கிடைத்தது. டோலிவுட்டிலும் இளம் ஹீரோக்களுடன் நடித்து மாஸ் காட்டினார். அதேநேரம், தமிழில் தேசிய விலங்கு பெயரின் டைட்டிலில் உருவான படத்திலும் டாப் ஹீரோவுடன் டூயட் பாடினார். அதேபோல் போலீஸ் படத்தின் சீக்வெலிலும் ஹீரோயினாக நடித்தார். ஆனால், மலையாளத்தில் இருந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு அழகான காதல் படத்தில் நடித்து, நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். அதோடு அவரது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகத் தொடங்கியது.

 சீனியர் நடிகர்களுடன் ஜோடி

சீனியர் நடிகர்களுடன் ஜோடி

இப்போதும் தமிழில் சுத்தமாக மார்க்கெட் இல்லாத வாரிசு நடிகை, தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கிவிட்டாராம். ஆனால், அங்கேயும் சீனியர் நடிகர்களுடன் மட்டும் தான் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன. இந்த இரண்டு படங்களின் ஹீரோக்களுமே நடிகையின் அப்பா வயது நடிகர்கள் என்பது தான் நோட் செய்யப்பட வேண்டிய விசயமே. கையில் இருக்கும் இன்னொரு பிரம்மாண்டமான படம் மட்டுமே சொல்லிக்கொள்ளும் படி உள்ளதாம். ஆனாலும் தனது கெத்தை விட்டுக்கொடுக்காத அந்த வாரிசு நடிகை, எனக்கு இன்னும் மார்க்கெட் இருப்பதால் தான் இந்த பொங்கலுக்கு எனது இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன என சீன் போட்டு வருகிறாராம். ஆனால், இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், நடிக்குறதெல்லாம் சீனியர் நடிகர்கள் கூட, இதுல இந்த பந்தா தேவையா என ட்ரோல் செய்து வருகின்றனர்.