காதலருடன் சுற்றும் தமன்னா

இந்தி நடிகர் விஜய்வர்மாவை தமன்னா காதலிக்கிறார். விஜய்வர்மா இந்தியில் 2012-ம் ஆண்டு சிட்டகாங் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பிங்க், மான்சூன் ஷூட் அவுட், மாண்டோ, கள்ளிபாய், கோஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 2022-ல் ஆர்தாங்க், டார்லிங் ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

தமன்னாவையும், விஜய்வர்மாவையும் ஜோடியாக நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தற்போது தமன்னாவும், விஜய்வர்மாவும் மும்பை தெருக்களில் கைகோர்த்தபடி சுற்றி வரும் புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் தமன்னா நடித்த எல்லை மீறிய கவர்ச்சி மற்றும் படுக்கை அறை காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. ஜெயிலர் படத்தில் ஆடிய காவாலா பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க படக்குழுவினர் யோசிக்கிறார்கள்.