ஓ.டி.டி.யில் வெளியாகும் அனுஷ்காவின் திரைப்படம் - தேதி அறிவிப்பு

‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி ஆகியோர் நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படத்தை மகேஷ்பாபு பச்சிகொலா இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ திரைப்படம் வரும் 5-ந்தேதி நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.