உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 'கதர் 2' ரூ.450 கோடி வசூல்..!!!

‘கதர் 2’ திரைப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூலைத் தாண்டியது.

மும்பை,

கடந்த 2001-ம் ஆண்டு சன்னி தியோல் மற்றும் அமீஷா படேல் நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படம், “கதர்: ஏக் பிரேம் கதா”. இந்த படத்தின் தொடர்ச்சியாக ‘கதர் 2’ படம் எடுக்கப்பட்டு கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் வெளியாகி 17 நாட்களில் ரூ.450 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதன்மூலம் ‘கதர் 2’ உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் “வேகமாக ரூ 450 கோடி” என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது அதன் தயாரிப்பு நிறுவனம் இதனை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர்(தற்போது எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

1971 ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்ட, “கதர் 2”, தாரா சிங் (தியோல்) தனது மகன் சரண்ஜீத் சிங்கை (உத்கர்ஷ் ஷர்மா) பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து மீட்பதற்காக பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தை குறித்த கதையம்சம் கொண்டது. இதில் படேல், மனிஷ் வாத்வா மற்றும் கௌரவ் சோப்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.