உலக அளவில் வசூல் சாதனை : பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த பெண் இயக்குனர்

ஹாலிவுட்டில் கிரெட்டா ஜெர்விக் இயக்கிய ‘பார்பி’ படம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது. மார்கோட் ரோபி, ரையான் கோஸ்லிங், அமெரிக்கா பெரரா, மைக்கேல் செரா, இசா ரே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உலக அளவில் ‘பார்பி’ திரைப்படம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

உலக சினிமா வரலாற்றில் பெண் இயக்குனர் இயக்கிய திரைப்படம் பில்லியன் டாலர்களை கடந்து வசூல் செய்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.

இதன் மூலம் உலக அளவில் கிரெட்டா ஜெர்விக் கவனம் ஈர்த்துள்ளார். மேலும் பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த 29-வது இயக்குனராகவும் கிரெட்டா ஜெர்விக் திகழ்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பில்லியன் டாலர் கிளப்பில் இணைவது என் கனவு. அது நிறைவேறியதில் மகிழ்ச்சி. அடுத்தடுத்து இது தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

‘பார்பி’ திரைப்படம் அமெரிக்காவில் 459 மில்லியன் டாலர்களையும், வெளிநாடுகளில் 572 மில்லியன் டாலர்களையும் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.