உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியுடன் 'ஜெயிலர்' படம் பார்த்த ரஜினிகாந்த்!

உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவுடன் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படம் பார்த்தார்.

லக்னோ,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.

இதனிடையே, இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார்.

இந்நிலையில், உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவுடன் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் பார்த்தார். நடிகர் ரஜினியுடன் அவரது மனைவி லதாவும் உடன் இருந்தார்.