இயக்குனர் நெல்சனுக்கு கார் பரிசளித்த கலாநிதி மாறன்

ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.

சென்னை,

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்திருந்தார். தற்போது ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.

இந்த நிலையில் கலாநிதி மாறனுக்கு நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக இந்த அழகான காரை எனக்கு பரிசளித்ததற்கு மிக்க நன்றி கலாநிதிமாறன் சார் , உங்களுடன் இணைந்ததில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, காசோலை உண்மையிலேயே ஒரு ஆச்சரியத்தை அளிக்கிறது . என தெரிவித்துள்ளார்.