இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை காண மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

இந்திய கிரிக்கெட் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

சென்னை,

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

அவர்களிடம், போட்டியை காண செல்கிறேன் என்று அவர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.