அல்லு அர்ஜுன் பாடலுக்கு குழந்தைகளுடன்  நடனமாடும் விஜய்.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ

இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சென்னை,

நடிகர் விஜய், நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் குழந்தைகளுடன் ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு கியூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)