அரசியலுக்கு வர முடிவா? அபிஷேக் பச்சன் விளக்கம்

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான அபிஷேக் பச்சனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அபிஷேக் பச்சன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

அமிதாப்பச்சன் ஏற்கனவே அரசியலில் ஈடுபட்டு பிரயாக்ராஜ் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து எம்.பி. பதவி வகித்தவர். அபிஷேக் பச்சனின் தாயாரும் நடிகையுமான ஜெயாபச்சனும் சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.

எனவே அபிஷேக்பச்சனும் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து அமிதாப்பச்சன் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அபிஷேக் பச்சன் கூறும்போது, “நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் ஆர்வம் கொஞ்சமும் இல்லை” என்றார்.