Lyricist Yugabharathi

எம்புட்டு இருக்குது ஆச பாடல் வரிகள்

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஓஓஓ…

கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம்
எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் அஅ.. ஆஆஆ…

ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி
கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு
பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து

மஞ்சக்கயிறு ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட

எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்…

Movie: Saravanan Irukka Bayamaen
Lyrics: Yugabharathi
Music: D. Imman

Leave a Reply