Anbulla Kadhalukku cover

Movie: Anbulla Kadhalukku (1999)
Music: Deva
Lyricists: Kavi Ravi
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண்: மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே நாளைய நிலவும் நீதான் மாறும் உலகில் வாழும் வாழ்வில் சோகம் எல்லாம் வீண் தான்

ஆண்: சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே ஏய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஆண்: ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண்: காதோரம் கேட்கும் ரீங்காரம் எல்லாம் காதலி உன் சுவாச சத்தம் நீங்காமல் என்னை தூங்காமல் செய்யும் நீதானே என் காதல் சொர்க்கம்

ஆண்: உன் விழியின் ஸ்பரிசம் எல்லாம் உயிர் வரையில் உரசுதடி என் உயிரின் சுவாசமெல்லாம் உன் வழியே வீசுதடி

ஆண்: இந்த பருவம் பறந்து போவதற்குள் இந்தக் கனவு கலைந்து போவதற்குள் நான் பிறந்த காரணத்தை சொல்லிவிடு

ஆண்: சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஆண்: ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண்: ……….

ஆண்: கண்மணி உந்தன் புன்னகை எல்லாம் கண்ணுக்குள் படம் பிடித்து வைத்தேன் உன் இதழ் சிந்தும் ஓசைகள் எல்லாம் உயிருக்குள் ஒலிப்பதிவு செய்தேன்

ஆண்: உண்ணாமல் உறங்காமல் உயிர்த்திருக்கும் வழிக் கண்டேன் உன் நிழலாய் நான் மாறி உன்னோடு வாழ்கின்றேன்

ஆண்: உன்னைத் தேடி என்னைக் கண்டுக் கொண்டேன் ரெக்கையின்றி விண்ணை தொட்டுவிட்டேன் சித்தமெங்கும் சிற்பமாக உனை வடிப்பேன்

ஆண்: சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே ஆங்..கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஆண்: ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஏய் ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண்: மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே நாளைய நிலவும் நீதான் மாறும் உலகில் வாழும் வாழ்வில் சோகம் எல்லாம் வீண்தான்

ஆண்: கண்ணீரில் காலம் தள்ளாதே ஏய் நிலவே காலங்கள் போனால் வராதே ஹோய் மேகங்கள் வானம் ஆகாதே எந்நாளும் சோகங்கள் வாழ்க்கை ஆகாதே…