Lyricist Na. Muthukumar

யாரோ இவன் யாரோ இவன் பாடல் வரிகள்

யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன் உன் பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்..

என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே உன் மாா்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே..
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் நா நா நா நா நா நா நா நா..

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில் என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே..

எனக்காகவே பிறந்தான் இவன் எனை காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

என் கோடையில் மழையானவன் என் வாடையில்
வெயிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

Movie: Udhayam
Lyrics: Na. Muthukumar
Music: G. V. Prakash Kumar