Movie: Bhuvana Oru Kelvi Kuri (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. B. Balasubrahmanyam
Added Date: Feb 11, 2022
ஆண்: விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
ஆண்: விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
ஆண்: உன் நினைவே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்.ம்ம்.. புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே
ஆண்: விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
ஆண்: {ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே} (2)
ஆண்: காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி கண்களுக்குள் விளைந்த மாங்கனி காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
ஆண்: விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
ஆண்: {கையளவு பழுத்த மாதுளை பாலில் நெய்யளவு பரந்த புன்னகை} (2)
ஆண்: முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி மோக மழை தூவும் மேகமே யோகம் வரப் பாடும் ராகமே
ஆண்: விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே எங்கெங்கும் உன்னழகே ம்ம்ம்ம்…