Asura Guru cover

Movie: Asura Guru (2019)
Music: Ganesh Raghavendra
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Naresh Iyer and Rita

Added Date: Feb 11, 2022

ஆண்: வில்லாதி வில்லி எந்தன் பக்கம் வந்தாய் தூங்காமல் துப்பறிந்து தோழி ஆனாய்

ஆண்: நஞ்சுள்ள கள்ளன் என்றே எண்ணம் கொண்டாய் நெஞ்சுள்ள நல்லன் என்று கண்டறிந்தாய் சிடுசிடுவென சீண்டிட்டாய் சடுகுடு என ஆடிட்டாய் பரபரவென தினமும் போரிட்டாய்

ஆண்: ஓ என் திறமை வாசித்தாய் என் தனிமை நேசித்தாய் திசை மாறிய தென்றல் போல நின்றாய்

பெண்: தடுப்பணை ஏதும் இல்லா நதி தொடர் நான்தானே நிராயுதன் உன்னை கண்டு சற்றே நின்றேனே

பெண்: அடாவடி வாதம் செய்யும் தடாலடி பெண்தானே அலாவுதீன் பூதம் போல அன்பாய் பூத்தேனே

பெண்: வழி தவறிய சோகம் விரைவினில் அது தீரும் உன்னை மறந்து உந்தன் விழிகள் தூங்குமே ஓ நிழல் உலகம் போதும் நினை அழைக்கும் காலம் இருளை விட்டு வெளியே வருவாய் நீயே

ஆண்: வில்லாதி வில்லி எந்தன் பக்கம் வந்தாய் தூங்காமல் துப்பறிந்து தோழி ஆனாய்

குழு: ………..

ஆண்: இனிமைகள் ஏதும் இல்லா துணிகரம் நான்தானே மனோகரி உந்தன் நட்பில் மவ்வம் கண்டேனே

ஆண்: அளாவுதல் ஏதுமின்றி உலா வரும் ஆண்தானே களேபரகன்னி உந்தன் பரிவில் சரிந்தேன்னே

ஆண்: தலை மறைகிற என்னில் குறை உள்ள ஒரு நெஞ்சில் முதல் முதலாய் மாற்றம் ஒன்று தோன்றுதே ஓ தரிக்கெட்ட ஒரு வானம் தரை இறங்கிடும் நேரம் அரவணைக்கும் பூமி பாதை நீயே

ஆண்: வில்லாதி வில்லி எந்தன் பக்கம் வந்தாய் தூங்காமல் துப்பறிந்து தோழி ஆனாய்

ஆண்: நஞ்சுள்ள கள்ளன் என்றே எண்ணம் கொண்டாய் நெஞ்சுள்ள நல்லன் என்று கண்டறிந்தாய்

பெண்: வெகு நாளாய் குறி வைத்தேன் விரல் தடயங்கள் சோதித்தேன் உன்னை சிறையிட வழிகள் தேடினேன் ஓ உன் சரிதை வாசித்தேன் உன் தனிமை நேசித்தேன் உனக்கென சில கேள்விகள் பரிசாய் தந்தேன்