Anbu Kattalai cover

Movie: Anbu Kattalai (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: {ஹா..ஆஆ… ஹா..ஆஆ… ஹா..ஆஆ… ஹா..ஆஆ…} (2)

பெண்: வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா குத்தகை எடுத்து சுத்துற சுத்துற வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா கிள்ளி எடுத்து இடிச்சு உனக்கிதை கத்து கொடுக்கிறேன் உள்ள இனிக்கும் சிவக்கும் மணக்கும் மாமா

பெண்: வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா குத்தகை எடுத்து சுத்துற சுத்துற வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா

பெண்: கொஞ்சம் பொறுங்க அழகு யுவராசா மஞ்சம் விரிப்பேன் உனக்கு புது தினுசா கொஞ்சம் பொறுங்க அழகு யுவராசா மஞ்சம் விரிப்பேன் உனக்கு புது தினுசா

பெண்: அள்ளவும் கிள்ளவும் நீதானே வாராயோ கன்னத்த தொட்டு கைலாசம் பாக்கலையோ அள்ளவும் கிள்ளவும் நீதானே வாராயோ கன்னத்த தொட்டு கைலாசம் பாக்கலையோ

பெண்: சந்தனம் உண்டு உனக்கொரு சங்கதி உண்டு மந்திரம் உண்டு அதுக்கொரு தந்திரம் உண்டு அட எடுத்து கொடுத்து படிச்சு முடிச்சு புடிச்ச கதைய படிச்சு படிச்சு பார்ப்போம் சேர்ப்போம் வா ராசா

பெண்: வெத்தலை வெத்தலை கொழுந்து வெத்தலை பத்தல பத்தல எனக்கு பத்தல சத்தியமா குத்தகை எடுத்து சுத்துற சுத்துற வித்தைய மறந்து வெட்டியா நிக்குற பத்தியமா

பெண்: வெத்தலைப் பொட்டி இருக்கு மடிமேலே மத்தது எல்லாம் உங்க மனம் போலே வெத்தலைப் பொட்டி இருக்கு மடிமேலே மத்தது எல்லாம் உங்க மனம் போலே

பெண்: கட்டி முடிக்கணும் ஜோரா நீதானே அத்த மகனுக்கு மொத்தமும் இங்கே நான்தானே கட்டி முடிக்கணும் ஜோரா நீதானே அத்த மகனுக்கு மொத்தமும் இங்கே நான்தானே

பெண்: ஒத்திகை வச்சு மனசுல ஒன்னையும் வச்சு நித்திரை கெட்டு பக்கத்துல நிக்குற சிட்டு அட விளக்கு முழுக்க முழிச்சு இருக்கு ஒனக்கும் எனக்கும் பழக்கம் இருக்கு பார்ப்போம் தீர்ப்போம் வா ராசா