Lyricist Palani Bharathi

வெண்ணிலவே பாடல் வரிகள்

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா

தொலை தூரம் நின்றும் நீ ஏன் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா

அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா

அந்த சுகமான நாட்கள் இனி தினம் தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா

அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா

கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும்
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை

தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும்
என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை

என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா

தொலை தூரம் நின்றும் நீ ஏன் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

Movie: Kannan Varuvaan
Lyrics: Pazhani Bharathi
Music: Sripy