Movie: Koyil Puraa (1981)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண்: கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய்

ஆண்: இளைய தென்றல் காற்றினிலே ஏ…ஏ..ஏ..ஏ..ஏ..ஏ… இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண்: அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய்

ஆண்: தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே

ஆண்: நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது நித்தம் ஒரு புத்தம் புது இசைத்தமிழ் வடித்தது ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும் மனம் குணம் அறிந்தவள்

ஆண்: குழலது சரியுது சரியுது குறுநகை விரியுது விரியுது விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ