Aarilirunthu Arubathu Varai cover

Movie: Aarilirunthu Arubathu Varai (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண்: காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…

ஆண்: அன்பை நான் தந்தேன் தினம் ஆசையோடு காவல் நின்றேன் சொந்தமே என்றேன் அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்

ஆண்: நெஞ்சிலே ஈரம் அது காய்ந்து போன பாலைதானா வறண்ட நிலம் நீரை தேடுது கசந்த மனம் ஞானம் பேசுது ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…

பெண்: ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்…. ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆரிரோரிரோரி ராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

ஆண்: மலர்களை அள்ளி தரும் கைகள் மீது வாசம் சேரும் முள்ளையே கண்டேன் அந்த காயம் தந்த பாடம் போதும்

ஆண்: கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் செய்த பாவம் நினைப்பவர்கள் மறந்த நேரமே மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண்: காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்..