Lyricist Na. Muthukumar

வசந்த முல்லை பாடல் வரிகள்

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா

உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல
போகோ சேனல் பார்க்க வெச்சான்
கபடி கபடி கபடி கபடி
காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான்

ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே
ஹே ஹே ஹே ஹே

அப்போ கானா தான் புடிக்குமே இப்போ மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன் கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்

காதல் என்பது ஆந்தைய போலே நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயை போலே கவிதையா அது கொரைக்கும்
அவ தும்மல் அழகுடா பிம்பில் அழகுடா சோம்பல் அழகுடா வசந்த முல்லை

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே

காலமெல்லாம் நானறிவேன் வா வா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே

நம்பியார போல் இருந்தேனே எம்.ஜி.ஆர போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளந்தேனே தும்பி பிடிக்கவே மாத்திட்டா

காதல் என்பது காபியை போலே ஆறி போனா கசக்கும்
காஞ்சி போன மொளகா பஜ்ஜி கேக்க போலவே இனிக்கும்
தாடி வெச்சிருக்கும் கேடி ரவுடி முகம் தேடி ஏஞ்சல போல் தெரியுது மாப்பு

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா

உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல போகோ சேனல் பார்க்க வெச்சான்
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான்

ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே…

Movie: Pokkiri
Lyrics: Na. Muthukumar
Music: Mani Sharma