Anni cover

Movie: Anni (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubramanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும்
பெண்: அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்
ஆண்: நான் நீச்சல் போட நீதான் பாலாறு
பெண்: நான் மால போட நீதான் வேறாரு

ஆண்: அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும்
பெண்: ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்

ஆண்: நான் பேசி பேசி ஆழம் பார்த்தேன் பொண்ணு மனச
பெண்: நீ பாக்க பாக்க ஏதோ பண்ணும் சின்ன சிறுச

ஆண்: பத்து விரல் தூண்டுதடி
பெண்: ஹான்
ஆண்: பக்கம் வந்து பூப்பறிக்க
பெண்: ஆஹான்

பெண்: விட்டு விட வேணுமய்யா வெக்கம் வந்து நான் துடிக்க
ஆண்: வாம்மா வாம்மா விலகலாமா.. மல்லிகைய வண்டு விடுமா

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும்
பெண்: அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்
ஆண்: நான் நீச்சல் போட நீதான் பாலாறு
பெண்: நான் மால போட நீதான் வேறாரு

ஆண்: அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும்
பெண்: ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்

ஆண்: நான் வாடக் காத்தா மாறப்போறேன் ஆடையிழுக்க அஹஹா
பெண்: நான் ஆதி அந்தம் அங்கம் எல்லாம் மூடி மறைக்க

ஆண்: பாய் விரிச்சு பாட்டெழுத வாலிபம்தான் காத்திருக்க
பெண்: நீ எழுதும் பாட்டுக்கெல்லாம் தாளமிட நானிருக்க
ஆண்: நேரம் காலம் நல்லா இருக்கு கற்பனைய கொட்டிவிடவா…

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும்
பெண்: ஆஹ்…அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்
ஆண்: நான் நீச்சல் போட நீதான் பாலாறு
பெண்: நான் மால போட நீதான் வேறாரு

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர தென்காசி தூறல் விழும்
பெண்: அத்தானும் பக்கம் நின்னாலே போதும் குத்தால சாரல் வரும்…